முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos)

Sri Lanka Police Mullaitivu Crime Drugs
By Shan Sep 19, 2023 06:24 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சிலாவத்தை பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புக்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கிராம அலுவலர் தலைமையில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து தமது கிராமத்தில் சிவில் பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்து போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளரின் மகள்: எழுந்துள்ள சர்ச்சை

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளரின் மகள்: எழுந்துள்ள சர்ச்சை

 

இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கை

கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கிராமத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை இனம்கண்டு அவர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos) | Public Action To Eliminate Illegal Activists

குறித்த கிராமத்தின் கிராம அலுவலர் தலைமையில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.B.M.A அமரசிங்க பங்குபற்றுதலுடன் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகம் உள்ளிட்ட கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி சிவில் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த சிவில் பாதுகாப்பு குழு தமது கிராமத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றவர்களை கண்டறிந்து பொலிஸாரை அழைத்து அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் சட்டம்: மீறினால் கடுமையான நடவடிக்கை

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் சட்டம்: மீறினால் கடுமையான நடவடிக்கை

கைது நடவடிக்கை

அந்தவகையில் தமது கிராமத்தில் தீர்த்தக்கரை பகுதியில் அதிகமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவரும் நிலையில், அவ்வாறு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் அதிகளவான கசிப்புடன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos) | Public Action To Eliminate Illegal Activists

இதேபோன்று கிராமத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் குறித்த சிவில் பாதுகாப்பு குழு கண்டுபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்தோடு தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos) | Public Action To Eliminate Illegal Activists

போதைப்பொருள் பாவனை

சட்டவிரோத செயற்ப்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நபர்களுக்கு பொலிஸார் உதவி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குறித்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் ஒவ்வொரு கிராமமும் தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்க முன்வந்தால் பொலிஸார் மீது குற்றம் சாட்டிக்கொண்டு இருக்காது எமது கிராமங்களில் மாவட்டத்தில் நாட்டில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ். வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

 நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US