இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் சட்டம்: மீறினால் கடுமையான நடவடிக்கை
சமூக வலைத்தளங்களில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்க விரைவில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.
காதல் உறவின் போது எடுக்கப்பட்ட படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த உறவு முறிந்த பிறகு மற்றவர்களை துன்புறுத்தும் சம்பவங்களை தடுக்க முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
அதன்படி முதன்முறையாக இத்தகைய குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் சிறைத் தண்டனையும் அல்லது ஐந்து இலட்சம் ரூபாவுக்கு குறையாமல் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |