மாகாண சபை தொடர்பில் தென்பகுதி மக்களுக்கு தேவையற்ற பயம் உள்ளது: மகிந்த தேசப்பிரிய (Photos)
மாகாண சபை மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென் பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் ' எமது உரிமைகள் எமது வளங்களை பாதுகாப்பதற்காக எமது மாகாணத்தின் மாகாணசபையை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளிலான வேலைத்திட்டம் பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (24.12.2023) நடைபெற்றுள்ளது
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களும், இளைஞர், யுவதிகளும் தொடர்ச்சியான அரசியலில் பங்குபற்ற வேண்டும். தற்போது மறைக்கப்பட்டுள்ளதாக உள்ள தேர்தல் செயற்பாடுகள் குறித்து மக்களை அறிவூட்டுவதன் மூலம் மக்களுக்கு மாகாண சபை குறித்து தெளிவூட்ட முடியும்.
தென் பகுதி மக்கள் தேவையற்ற பயம்
நாட்டின் அபிவிருத்திக்கு மாகாணசபை அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும். மாகாணங்களுக்கிடையே அபிவிருத்திக்கு போட்டிகளை ஏற்படுத்த வேண்டும்.
தென்பகுதி மாகாண சபை கட்டமைப்பினை விட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் குறித்த முறைமையில் விருத்தி கண்டுள்ளதாகவும் நிருவாக அதிகாரங்கள் மட்டுமன்றி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு நாம் இணங்க வேண்டும்.
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது பிரஜைகளாகிய எம்மனைவரதும் பொறுப்பாக அமைவதாகவும் மாகாண சபை மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென் பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அரஜூன, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் தலைவர் துஷித ஹர்சன உள்ளிட்ட இளைஞர் யுவதிகள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |