மர்மமாக உயிரிழந்த பெண் - சடலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்
களுத்துறை, அகலவத்தை, திரிவணகெட்டிய பகுதியில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (01) காலை தோட்ட வீடொன்றிலிருந்து இவ்வாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் திரிவணகெட்டிய தோட்டத்தை சேர்ந்த பி. லெச்சமி (74) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, அங்கு சென்றபோது, குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக சந்தேகித்து, பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட உடலுக்கு அருகில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்,களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam