வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் - துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களத்தினர்
தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கீகரித்து பெயர் பலகை நடுவதற்கு இன்று(21.11.20250 வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் பிரதேச வெல்லாவெளியில் அமைந்துள் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் பிரதே சபைத் தவிசாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினர் அற்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கலைந்து சென்றனர்.
வடக்கு கிழக்கு பௌத்தமயமாக்கல் நடவடிக்கை
இதன்போது கருத்துத் தெரிவித்த போரதீவுப் பற்றுப் பிரதெ சபையின் தவிசாளர் வி.மதிமேனன். போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட வேத்துச்சேனை, கண்ணபுரம், மற்றும் விவேகானந்தபுரம் ஆகிய கிராமங்களுக்கு தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலே மூன்று உத்தியோகத்தர்கள் தொல்லியல் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து அடையாளப்படுத்தி பல பதாகைகளை இடுவதற்காக எமது பிரதேசத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் இப்பிரதேச பொது அமைப்புக்கள், பொதுமக்கள் அயல் பிரதேசமான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு தொல்லியல் இடம் என அடையாளப்படுத்துவதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளை எதிர்த்து இவை தொல்லியல் இடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்து இருந்தோம்.
தொல்லியல் திணைக்களத்தினால் 24 இடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள். தற்போது 34 இடம் இருப்பதாக கூறுகின்றார்கள்.
அவற்றுக்குரிய பதாகைகளை நடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள். அந்த வகையில் அதற்கு எமது மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாரிய எதிர்ப்பினை தெரிவித்தோம்.
வடக்கு கிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுகின்றன.
அதுபோன்றுதான் அண்மையில் திருகோணமலையிலும், புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிலே பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலே வந்த அரசாங்கம் முன்னர் ஜேவிபியினுடைய கொள்கையை பின்பற்றி வந்துள்ள அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்கள் வாழும் பகுதியிலே தொல்லியல் இடங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டை தோற்றுவித்து எமக்குள்ளே ஓர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
அந்த வகையில் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக் கொள்வது யாதெனில் எங்கள் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களை நீங்கள் குழப்ப முடியாது.
தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில்
எப்போதும் நாங்கள் எமது சமய புராண பூர்வீக நிலத்தை நாங்கள்தான் ஆள வேண்டும். நீங்கள் உங்களுடைய பௌத்த மயமாக்கல் என்பதை தொல்பொருள் திணைக்களத்தை வைத்து எமது நிலங்களை அபகரிக்க கனவிலும் நினைக்க கூடாது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த காலத்தில் சில தமிழ் மக்கள் விட்ட தவறினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக உருவாக்கி இருக்கின்றார்.

இன்றைய தினம் இந்த செயற்பாட்டுக்காக நாம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் உரையாடி உள்ளோம்.
எங்களுடைய தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில் பொது அமைப்புகளின் எதுவித சம்பந்தங்களும் இல்லாமல் எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி பலாத்காரமாக அணுகி எதையும் சாதித்துவிட முடியாது.
மக்களின் பலத்தினால் அவர்களின் அணுக்கலை நாம் இன்று முறியடித்து இருக்கின்றோம். எனவே தொல்லியல் திணைக்களத்தினர் முதன் முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும்.
எமது பிரதேசத்தில் அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கும் 34 பிரதேச இடங்களுக்கும் சென்று அங்கிருக்கின்ற பொது அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும்.
அதன் பின்னர் தான் தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தி பதாகைகளை இடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

