தலதா மாளிகைக்கு அநுர அணிந்து சென்ற உடையை பேசுபொருளாக்கிய நுகேகொடை பேரணி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்முறையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபடும் போது அணிந்திருந்த உடை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது நுகேகொடையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேரர்களை வணங்காத அமைச்சர்..
மேலும், பொது இடங்களிலும்,
பதவியேற்பு மற்றும் கடமையேற்பு நிகழ்வுகளின் போதும் கூட அமைச்சர்கள் பௌத்த மதத் துறவிகளை வணங்குவதில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலதா மாளிகைக்கு வழிபட செல்லும் போது கறுப்பு காட்சட்டை அணிந்து சென்றார்.
புனித தந்த தாதுவை வழிபட செல்லும் போது கறுப்பு உடை அணிந்து செல்வது முறையானதா. இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்னர் எரிபொருள் விலையை குறைத்தார்களா? மின்கட்டணத்தை குறைத்தார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam