மகிந்தவிடம் அரசு மன்னிப்பு கோர வேண்டும்: உதய கம்மம்பில அரசுக்கு சவால்
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தொடர்பில் அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். தவறும் என்றால் மெதமுலகவுக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
நுகேகொடை ஆனந்த சமரக்கோன் வெளியரங்கில் இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,


மகிந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பணம் உண்டாவில் இருப்பதாகவும். அவர்களின் குடும்பம் இந்த நாட்டை கொள்ளையடித்தது என்றனர்.ஆகால் 14 மாதங்கள் கடந்து விட்டது ஒன்றும் நடக்கவில்லை.
இன்னும் 13 மாதங்கள் தருகிறோம்.இதெல்லாம் கண்டபிடிக்க வேண்டும் இந்த பேரணியில் கல்லவர்கள் யாரும் இருந்தால் பிடித்து சிறையில் போடுங்கள் நாங்கள் ஒன்றும் பேசப்போவதுமில்லை, எதிர்ப்பு காட்டவும் மாட்டோம்.
ஆனால் கல்வர்களின் போர்வையில் எதிரணியை கட்டுப்படுத்த நினைத்தால் அது நடைபெறாத காரியம். ஜனாதிபதி குறிப்பிடுகிறார். போதை பொருள் ஒழிப்புக்கு எதிரானது பேரணி என்கிறார்.
ஆனால் இன்று இந்த பேரணியில் அநேக பேச்சாளர்கள் பேசினர். யாராவது போதைப்பொருள் வேட்டைக்கு எதிராக பேசவில்லை என்றார்.