தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் தீ விபத்து
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(23.2.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து
விமான நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட இந்தத் தீ, விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு கருதி பயணிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன அல்லது வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தேவையான நடவடிக்கைகள்
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், புகையின் தாக்கம் காரணமாகச் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே தவிக்கும் சூழல் உருவானது.

தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விமான நிலையச் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.