அரகலயவில் போராடியவர்களை அடித்து விரட்டிய மகிந்தவின் ஆதரவாளர் - நாமலை ஜனாதிபதியாக்க நுகேகொடையில்!
அரகலயவில் போராடியவர்களை அடித்து விரட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் ஒருவர் நுகேகொடை பேரணியிலும் பங்குபற்றியிருந்தார்.
நுகேகொடை எலிமஹான் ரங்க பீடத்தில், இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21.11.2025) பாரிய பேரணியொன்றை நடத்தினர்.
இதன்போது, மகிந்தவின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
நாமலுக்கு ஆதரவு
இதேவேளை, 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதியன்று அரகலய போராட்டக்காரர்களுக்கும் மகிந்த ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.
அன்றையதினம், பிரதமராக இருந்த மகிந்த, தனது பதவியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க, அன்று மகிந்தவின் ஆதரவாளர்கள் சார்பில் போராட்டக்காரர்களை தாக்கிய அதே நபர், இன்று நுகேகொடை பேரணியிலும் நாமலுக்கு ஆதரவாக பங்குபற்றியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam