யாழ் மற்றும் மட்டக்களப்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் (Photos)
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை (27) மதியம் இடம்பெற்ற ஜும்மா தொழுகையினை தொடர்ந்து போராட்டகாரர்கள் ஐந்து சந்தி வரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம்
யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், சர்வதேச சட்டங்கள் இஸ்ரேலுக்கு பொருந்தாதா, அமெரிக்காவின் குழந்தை இஸ்ரேலே தாக்குதலை உடன் நிறுத்து போன்ற வாசகங்கள் மும்மொழிகளிலும் அடங்கிய அட்டைகள் போராட்டகாரர்களால் தாங்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே தற்போது மோதல் இடம்பெற்று வருகின்றமை சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
மட்டக்களப்பு
காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (27.10.2023) பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் ஜும்மா தொழுகையின் பின்னர் இந்த போராட்டம் இடம்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நாசகார இஸ்ரேல் ஒழிக, யுத்தத்தை நிறுத்து, பேச்சுவார்த்தைக்கு வா என்கின்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகள் ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் மதம் மொழி கடந்து அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
மேலதிக செய்திகள்: குமார்











உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
