கிளிநொச்சி விவசாயிகளின் இழப்பீட்டுக் கொடுப்பனவு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2024/ 2025 பெரும்போக நெற்செய்கையில் 95 விவசாயிகளுக்கான 167 ஏக்கருக்குரிய இழப்பீட்டுக் கொடுப்பனவு மாத்திரமே கிடைக்க பெற்றுள்ளதுடன் 958 விவசாயிகளின் விண்ணப்பங்கள் கமத் தொழில் மற்றும் காப்புறுதிச் சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 /2025 பெரும் போகத்தின் போது ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவான நெற்செய்கை பகுதி அளவிலும் முழுமையாகவும் அழிவடைந்திருந்தன.
இந்த நிலையில் நாடு பூராகவும் எழுபத்திiயாயிரத்தி ஐநுற்றி நாற்பது (75 540) விவசாயிகள் எண்பத்திமூவாயிரத்தி இருநூற்று ஐம்பத்திஇரண்டு (83252) ஏக்கருக்குரிய இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை பெற்றுள்ளனர்.
இதில் வடக்கு கிழக்கில் ஐம்பத்தி இரண்டாயிர்த்து அறுநூற்றி முப்பத்திரெண்டு (52632) ஏக்கர் குரிய இழப்பீட்டுத் தொகைகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் வெள்ளத்தினால் அதிக அளவு பாதிப்புகளை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
இழப்பீட்டுத் தொகை
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் கல்மடுக்குளம் அக்கராயன் குளம் உள்ளிட்ட குளங்கள் தொடர்ச்சியாக வான் வாய்ந்தமை மற்றும் தொடர்ச்சியாக பெய்த மழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பெருமளவான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்பட்டன.
இவ்வாறான வெள்ளத்தினால் பாரிய அழிவுகளும் ஏற்பட்டிருந்தன இவ்வாறு பாதிக்கப்பட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய பயிர் அழிவுகள் தொடர்பாக கமநல சேவை நிலையயங்கள் ஊடாக விண்ணப்பித்திருந்த போதும் குறைந்த விளைச்சலை அறுவடை செய்தமை நோய் தாக்கம் சிறந்த நீர் முகாமைத்துவம் இன்மை உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு ஆயிரத்து நுற்று இருபத்தைந்து (1125) விண்ணப்பங்கள் மாத்திரமே கமநல சேவை நிலையங்களுடாக காப்புறுதிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த விண்ணப்பங்களில் 90விதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 167 ஏக்கருக்குரிய 95 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையாக மூன்று மில்லியன் ரூபாய் மாத்திரமே கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக கிடைக்கப் பெற்றிருக்கின்றது
இயற்கை அனர்த்தம் காரனமாக அதிக பாதிப்பை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு நிரந்தரமான காப்பருதி உத்தியோகத்தர் இன்மை மேல்முறையீட்டு கோரிக்கைகளுக்குரிய விண்ணப்பங்கள் தமிழ் மொழியில் விவசாயிகளுக்கு அனுப்பப்படாமை என பல்வேறு இழுத்தடிப்புக்களால் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பில் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இதனை கண்டு கொள்வதில்லை என்றும் இந்த விடயங்களை கவனத்தில் எடுத்து தமக்கான இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.




