முல்லைத்தீவில் பாரிய போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு
எதிர்வரும் 08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாரிய போராட்டம்
எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளீர்தினம் மற்றும் 55 ஆவது ஜக்கியநாடுகள் சபைக்கூட்டத்தொடர் நடைபெற்றவுள்ளது.
இந்த நிலையில் பெண்கள் ஆகிய நாங்கள் எங்கள் உறவுகளை தேடிவருவதுடன் அடிமைத்தனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தாமதமாகி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் அதற்கான நிதி உதவியினை அரசாங்கம் செய்யவேண்டும் என்பதுடன் அந்த மனித எச்சங்கள் யார் என்பதை கண்டுபிடித்து அதற்கான தீர்வு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri