கொழும்பில் சாந்தனின் உயிரற்ற உடலை பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலை கொழும்பில் வைத்து திறந்து பார்த்த போது பெறும் அதிர்ச்சியடைந்ததாகவும் உடலில் மோசமான கீறல்களும், கோடுகளும், அடையாளங்களும் காணப்பட்டதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் க.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சாந்தனுக்கு இந்தியாவில் நேர்ந்த இன்னல்கள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் வித்துடல் இலங்கைக்கு அனுப்பப்படும் போது தரம் குறைந்த பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்பட்டு அவருக்கு இந்தியாவிலும்,கொழும்பிலும் இரண்டு பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
மனிதாபிமானத்தை கடைப்பிடிக்காத மாநில அரசு
சாந்தன் இறந்த பின்னர் கூட மனிதாபிமானத்தை கடைப்பிடிக்காத மாநில அரசு அவர் உயிரோடு இருக்கும் போது எவ்வாறு அவரை கையாண்டிருக்கும் என்பது வேதனையான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈழத்தமிழர்கள் உட்பட ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில், இந்த ஈழத்தமிழர்கள் முகாம்களிலேயே இறந்துவிட வேண்டும் என மத்திய அரசு செயற்பட்டதாகவும்,இதற்கு உடந்தையாக தமிழக அரசு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. அரசின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் மோசமான முறையில் கையாண்ட நிலையில், இந்த முகாம்களை உருவாக்கி ஈழத்தமிழர்களை தண்டித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப்போன்றே தற்போது கருணாநிதியின் மகனும் செய்து வருவதாகவும்,திட்டமிடப்பட்டு சாந்தன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சிறப்பு முகாமில் எஞ்சியுள்ள மூவரையும் விரைவில் நாட்டிற்கு அழைக்க வேண்டும் என்ற செய்தியையே சாந்தன் எமக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |