சொந்த மண்ணில் அபார வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ்
புதிய இணைப்பு
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தப் போட்டியானது, பங்களாதேஷின் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றையதினம் (06.03.2024) நடைபெற்றது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சாரபில் தஸ்கின் அகமட், மகேதி ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், சௌமியா சர்க்கார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பங்களாதேஷ் அணி
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றதுடன் லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மதீஷ பத்திரன 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
Dutch-Bangla Bank Bangladesh ? Sri Lanka T20i Series 2024 | 2nd T20i ?
— Bangladesh Cricket (@BCBtigers) March 6, 2024
Match Result | Bangladesh won by 8 wickets??
Details ?: https://t.co/T8LrzlQehy#BCB | #Cricket | #BANvSL pic.twitter.com/oSxOFFjAF7
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.
இரண்டாம் இணைப்பு
தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.
ஆரம்பத் துடுப்பெடுத்தாளராக களமிறங்கிய சௌம்யா சர்கார் பினுர பெர்னாண்டோ வீசிய பந்தில் விக்கெட் காப்பாளாரான குஷல் மெண்டிஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, சௌம்யா சர்கார் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்த போது, அவர் ஆட்டமிழக்கவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும், குறித்த மறுபரிசீலனையின் (ultra edge) போது,பந்து துடுப்பில் பட்டுள்ளதாக சிறிய அதிர்வலை ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நடுவரால் அவர் ஆட்டமிழகவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுகொண்டுள்ளது.
இந்தப் போட்டியானது, பங்களாதேஷின் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றையதினம் (06.03.2024) நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 27 பந்துகளுக்கு 38 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
பங்களாதேஷ் பந்துவீச்சு
மேலும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தலா 28 மற்றும் 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை, பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத், மஹேடி ஹசன், முஸ்தபிஸுர் ரஹ்மான் மற்றும் சௌம்யா சர்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |