'மோசமான நிதி நிர்வாகத்தால் மனித உயிர்களை பலி கொடுக்கபோகின்றோமா..!'- வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துவதுறையும் பல்வேறு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு எதிராக வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அரசுக்கு எதிரான இன்று (8) நண்பகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் ஏனைய ஊழியர்கள் அடங்கலாக பலரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பதாகைகளை ஏந்தியவாறு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்னால் பேரணியாக வந்து கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, ”மருந்துகளைத் தடையின்றி வழங்கு”, ”ஆரோக்கியத்தை அழிக்காதே”, ”எரிபொருளை தடையின்றி வழங்கு”, “பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்”, “விலை அதிகரிப்பை உடனடியாகக் குறை”, “நாட்டை படுகுழிக்குள் தள்ளாதே”, “மக்களின் அசௌகரியங்களைப் போக்கு”, “வன்முறையைத் தூண்டாதே”, “பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்காதே”, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி : ருசாத்
யாழ்ப்பாணம்
யாழ் வைத்தியசாலை முன்றலில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எற்பாட்டில், "மோசமான நிதி நிர்வாகத்தால் மனித உயிர்களை பலி கொடுக்கபோகின்றோமா?" என்ற கருப்பொருளில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இக் கவனயீர்ப்பு போராட்டமானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதான வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் ஆ.மதிவாணன் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றது.
“அத்தியாவசிய மருந்துகள் இல்லை”, “சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது”, “இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது”, “இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது”, “மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை”, “மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்”, “சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம்” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு வைத்தியர்களால் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என்றும் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என தெரிவித்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். போதான வைத்தியசாலையின் உபதலைவர் வைத்தியர் பி.மயூரன் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்,வைத்திய குழுவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமக்கான நீதியினை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.















அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
