போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!
போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் 9,000 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அனைத்து போக்குவரத்து விதி மீறல்களையும் கடுமையாக கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிமீறல்கள்
வேகமாக, பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான வகையில் வாகனங்களை செலுத்துதல் போன்றவற்றை கண்காணித்தல் மற்றும் வாகனங்கள் உரிய முறையில் பயன்படுத்தபடுகின்றனவா? என்பதை அறிய விசேட குழுக்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மைய காலங்களில் போக்குவரத்து தொடர்பான விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மது போதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகம் உள்ளிட்ட காரணங்களினாலேயே, அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், ஆண்டுக்கு சராசரியாக 38,000 வீதி விபத்துக்கள் பதிவாவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்துக்களில், சுமார் 3,000 பேர் உயிரிழப்பதுடன், 8,000 பேர் காயமடைவதாகவும் உலக வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
