யாழில் வர்த்தக நிலையமொன்றில் நால்வர் கைது!
யாழ். திருநெல்வேலி வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து அதிலுள்ள பொருட்களை திருடிய 19, 27, 30 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் நால்வர் இன்றையதினம்(26.09.2025) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையமானது, நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
இந்நிலையில், வர்த்தக நிலைய உரிமையாளர் இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
மேலதிக விசாரணை
அந்தவகையில், விரைந்து நடவடிக்கை எடுத்த கோப்பாய் பொலிஸார் இன்றையதினம் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்ததுடன் களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri