பாண் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஹட்டனில் பேக்கரி ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாணில் கை விரலின் தோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் துண்டு துண்டாக வெட்டி பொதி செய்யப்பட்ட பாணை கொள்வனவு செய்துள்ளார். அதில் விரலில் வெட்டப்பட்ட தோல் துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
180 ரூபாய் செலுத்தி பாண் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதனை உட்கொள்ளாத வாடிக்கையாளர் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார ஆய்வாளர்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
உரிமையாளருக்கு அபராதம்
விரலின் தோலைப் பரிசோதித்த டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார ஆய்வாளர்கள், பேக்கரி உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளார்.
சுகாதாரமற்ற முறையில் பேக்கரியை இயக்கியதற்காக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பல முறை வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக மீண்டும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
