சஜித்தின் சொத்து விபரங்கள் சமர்ப்பிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி அவர் தனது சொத்து விபரங்களை இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடித் தடுப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் இணையத்தளத்தில்
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் தனது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காமை குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்திருந்ததுடன், அது குறித்து வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி சொத்து விபரங்களைப் பூரணப்படுத்தி அதற்கடுத்த நாளே இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழுவில் சஜித் பிரேமதாச சமர்ப்பித்துள்ளார்.
குறித்த சொத்து விபரங்கள் தற்போது ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
