தம்பதியினரின் மோசமான செயல்..! பொலிஸார் அதிரடி நடவடிக்கை
சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் இன்று(26) கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈசி கேஸ் முறைமையில் பணத்தை பெற்றுக்கொண்டு கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்கு இத்தம்பதி போதைப்பொருள் விநியோகம் செய்கின்றது என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், நாவலப்பிட்டிய - தொலஸ்பாகை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் ஐஸ் பக்கெட்டை வைக்க முயன்றவேளை சந்தேக நபர்களை கைது செய்தனர்.
மேலதிக பொலிஸ் விசாரணைகள்
அவர்களை பரிசோதித்த போது, 52 ஐஸ் பக்கெட்டுகள் மீட்கப்பட்டன. ஒரு பக்கெட் ஐஸ் போதைப்பொருள் 7 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 23 மற்றும் 27 வயதுடைய தம்பதியினர் கம்பளை, கீரபனை பகுதியை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.
டுபாய் தாரு என்ற போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியே இவர்கள் ஈஸிகேஸ் முறையில் விற்று வந்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
