உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணையில் சிக்கவுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தவறான விசாரணை அறிக்கைகளை பெற்றதாகவும், மேலும், புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தினை தொடர்ந்து அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
"தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு அரசியல் ஒரு முக்கிய காரணம்.
தாக்குதலுக்குப் பிறகு அதற்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் ஆட்சிக்கு வந்தனர். தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களும் உயர் பதவிகளை வகித்து வருவது கண்டறியப்பட்டது.
அப்படியானால் அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?"
சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும்.
விசாரணை நடவடிக்கை
இதுபோன்ற சூழ்நிலையிலேயே விசாரணை நடவடிக்கைகள் தமது தரப்புக்கு கிடைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நேற்று நடந்த சம்பவம் அல்ல. இது ஒரு கடினமான பணி.
எனினும் சி.ஐ.டி அதிகாரிகள் திறமையானவர்கள் என்று நான் நம்புகிறேன்.
நாங்கள் பார்த்தது போல், பல சி.ஐ.டி அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
எனவே, விசாரணைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன." என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
