யாழ்.தையிட்டியில் பதற்றம்! போராட்டக்களத்தில் நுழைந்த புலனாய்வு முகவர்கள்(Video)
யாழ்.தையிட்டி பகுதியில் விகாரை கட்டியமைக்கு எதிராக இடம்பெற்றுவரும் போராட்ட களத்தில் புலனாய்வு முகவர்கள் உள்நுழைந்ததால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட கொட்டகையினுள் தமிழர்கள் போன்று பொட்டுப் பிறைகள் என சின்னங்களை அணிந்து கொண்டு போராட்த்தில் களந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டிவரும் போராட்ட களத்திற்கு முன்னே செல்லக்கூடாது என பல்வேறு விடயங்களை கூறி அவர்களை மிரட்டி திசை திருப்ப முயன்றுள்ளனர்.
இவ்வாறு திசை திருப்ப முற்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியே அகற்றினர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதி நாளான இன்று (05.05.2023) காலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு மத்தியிலும் போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று நாள் போராட்டம்
இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை
போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று
நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.






சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
