யாழ்.தையிட்டி விகாரை: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
யாழ்.தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ தம்மிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (04.05.2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கு தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் நேற்று முன்தினம் முதல் (03.05.2023) பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,