ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தீவிரமடையும் போராட்டம்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிரந்தர வேலைவாய்ப்பு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நான்கு பேரில் இருவரின் உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென இருவரின் உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்த நிலையில்,1990 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்
இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.

மேலும், நடைபாதையை மறித்து உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு பொலிஸார் எதிப்பு வெளியிட்ட நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்த தங்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று கோரி நேற்று (26) காலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எனினும், இதுவரை பதில் இல்லாத காரணத்தினால், நான்கு போராட்டக்காரர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam