அமெரிக்க தூதுவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் இளையோர் மத்தியில் ஓரினச்சேர்க்கையை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக, தேசியவாதக் குழு ஒன்று போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டம் நேற்று(13.02.2025) நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரிவினைக்கு எதிரான கூட்டணி ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்போதைய அமெரிக்க தூதர் உள்ளூர் இளைஞர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை சித்தாந்தங்களை புகுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பிடம் வலியுறுத்தல்
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த வெகுஜன போராட்டங்களை ஆதரிக்க யுஎஸ்எய்ட் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்குமாறும் போராட்டக்காரர்கள் ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
