அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி:வட கொரியா கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்டு வரும் வருடாந்திர 'ஃப்ரீடம் ஷீல்ட்' (Freedom Shield) கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு வட கொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மையை இந்த இராணுவப் பயிற்சிகள் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள வட கொரியத் தலைவர் கிம் ஜோ உன்னின் சகோதரியும், அந்,நாட்டின் முக்கிய அதிகாரியுமான கிம் யோ ஜோங், இது "எண்ணிப்பார்க்க முடியாத மோசமான விளைவுகளை" ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
சுமார் 18,000 அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிகள், தற்காப்பு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுவதாக வொஷிங்டனும் சியோலும் அறிவித்துள்ள போதிலும், அதை ஏற்க வட கொரியா மறுத்துள்ளது.
அணு ஆயுதப் பயன்பாடு
இந்த இராணுவப் பயிற்சிகள் உண்மையில் தற்காப்புப் பயிற்சியாக அல்லாமல், போருக்கான ஒத்திகையாகவே பார்க்கப்படுவதாகக் கிம் யோ ஜோங் விமர்சித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஈரான்-இஸ்ரேல் போர்ச் சூழலில், இதுபோன்ற பெரிய அளவிலான இராணுவ நகர்வுகள் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், வடகொரியாவின் இந்த எதிர்ப்பு கடந்த காலங்களை விட சற்று மென்மையாக இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த முறை அணு ஆயுதப் பயன்பாடு குறித்த நேரடி மிரட்டல்கள் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டிய சூழலில், இருதரப்பு இராணுவப் பயிற்சிகள் பிராந்தியத்தில் பதற்றத்தை நீடிக்கச் செய்யும் ஒரு காரணியாகவே தொடர்ந்து இருந்து வருகின்றன.
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri