மகிந்தவின் விஜேராம இல்ல நீர் விநியோக துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) விஜேராம இல்லத்தின் ஒரு பகுதிக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டாதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று நீர் வழங்கல் சபை, அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ராஜபக்சவின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சொத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.அங்கு அவரது முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் பலர் வசித்து வந்தனர்.எனினும் 2024 அக்டோபரில் பணியாளர்கள் சொத்தை விட்டு சென்று விட்டனர்.
நீர்க்கட்டண நிலுவைத் தொகை
முன்னதாக இந்த சொத்துக்கான பயன்பாட்டு கட்டணங்கள், ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்துமாறு செயலகத்திற்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் அது செலுத்தப்படவில்லை.
இதேவேளை குறித்த சொத்துக்கான நீர்க்கட்டண நிலுவைத் தொகை 429,000 ரூபாய்கள் என்றும் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![கிளீன் தையிட்டி..!](https://cdn.ibcstack.com/article/0cf0c8c5-ad68-4e31-841a-7e29cf4596c2/25-67b1e86bd37bd-md.webp)