புதிய எதிர்க்கட்சி கூட்டணிக்கு சஜித்தே தலைவராக வேண்டும்: ரஞ்சித் வலியுறுத்து
இலங்கையில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள, விரிவான எதிர்க்கட்சி கூட்டணியை சஜித் பிரேமதாசவே (Sajith Premadasa) வழி நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை இன்று (13) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தற்போது மிகப்பெரிய எதிர்க்கட்சியை வழிநடத்துவதால், அவரே எதிர்காலக் கூட்டணியை வழிநடத்த தகுதியுடையவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தின் பெயர் பரிந்துரை
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பில் தற்போது பேசி வருகின்றன.

இந்த பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தகவல்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையிலேயே அதன் தலைமைக்கு சஜித்தின் பெயரை ரஞ்சித் மத்தும பண்டார பரிந்துரைத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam