ஊடகவியலாளர்கள் கொலைக்கு நிச்சயம் நீதி நிலை நாட்டப்படும்: நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விடயத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அவை நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி பேச்சு வார்த்தை
விசாரணையில் தெரியவரும் விடயங்களுக்கு அமைய தொடர்புடையவர்களுக்கு வழக்கு தொடரப்படும். குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு நீதி அமைச்சருக்கு கிடையாது.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும், வழக்கு தொடுக்கும் விடயத்தில் அரசு உறுதியாக உள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து ஜனாதிபதியும் பேச்சு நடத்தி வருகின்றார். எனவே, நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும். இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 4 நாட்கள் முன்
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்](https://cdn.ibcstack.com/article/9f7af4bd-8989-4057-b959-5e1fd4469ae7/25-67ade20235fa6-sm.webp)