பிரான்சில் பதற்றம்! பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் மோதல்
கடந்த வாரம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று பாரிஸ் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சில எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், கிராண்ட்ஸ் பவுல்வர்ட்ஸ் சாலையில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓய்வூதிய வயது உயர்வு
நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய வயதை 62 இருந்து 64 ஆக உயர்த்திய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிரான பேரணியின் முதல் நாள் இன்று பாரிஸின் வீதிகளில் ஐயாயிரம் பொலிஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர்.
கடந்த வியாழன் ஆணை மூலம் இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரவு நேர கலவரங்கள் நடந்துள்ளன, ஆனால் இன்று காலை எதிர்ப்பாளர்கள் விமான நிலைய முனையத்திற்கான அணுகலைத் தடுத்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்
புகையிரத தடங்களில் அமர்ந்து பிரான்ஸ் முழுவதும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒன்பதாவது நாளான இன்று போராட்டக்காரர்கள் மோதல்களுக்கு மத்தியில் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸார் மீது வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதமேந்திய கலகத் தடுப்புப் பொலிஸார் இன்று கலவரக்காரர்களைத் தடுத்து நிறுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், எதிர்ப்பாளர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு கண்ணீர் புகையால் நகரத்தின் வீதிகளை நிரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CGT தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, 800,000 பேர் பிரெஞ்சு தலைநகரில் அணிவகுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் உண்மையான எண்ணிக்கை அதில் ஒரு பகுதியே இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.