வவுனியாவில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்
அண்மையில் வவுனியாவில் (Vavuniya) உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்று (19.04.2024) வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இடம்பெற்றுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில், 17 வயதுடைய சிறுமியின் சடலம் அவரது வீட்டில் மீட்கப்பட்டிருந்தது.
போராட்ட பேரணி
இந்நிலையில், நேற்று இறுதிக் கிரியைகள் இடம்பெற இருந்தவேளை, சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் என தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் உயிரிழந்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது, 'சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும்', 'பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்' மற்றும் 'கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய்' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam