கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள்
கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.
மகஜர் கையளிப்பு
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள் வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடந்த வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்