ஜோசப் ஸ்டாலின் கைது செய்யபட்டமைக்கு எதிராக வடக்கில் ஆர்ப்பாட்டம்(Photos)
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பல பகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்பாட்டம் இன்று(4) காலை10.30 மணியளவில் பெரும்பாலான பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா
இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அந்தவகையில், ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய எமது பொது செயலாளர் முறையற்ற விதத்திலே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்வதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.
அத்துடன் இந்த அரசு அவசரகால சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும்.
எமது பொதுச்செயலாளர் உடனடியாக விடுவிக்கப்படாவிடின் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா வெளிக்குளம் மகாவித்தியாலம், இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் மற்றும் சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை உட்பட பெரும்பாலான பாடசாலைகளை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பாடசாலைகளிலும் முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(4) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜோசப் ஸ்டாலினின் கைது செய்யப்பட்டமையை கண்டிக்கும் வாசகங்களை கொண்ட பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக நேற்று(3) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சந்திப்பு
இதுவேளை, ஜோசப் ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் வேண்டுமெனவும் கோரி தொழிற்சங்க அமைப்புகள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் திலீபன் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சிவரூபன் உட்பட பலர் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று(4) இடம்பெற்றுள்ளது.
மேலதிக செய்தி - எரிமலை, தீபன்




இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
