புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் 60 காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு - கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள தேவிபுரம்,அ,ஆ பகுதி மக்கள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு எதிராகவும், காணிப்பகுதி உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது மனு ஒன்றினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கையளித்துள்ளனர்.
முன்வைக்கும் குற்றச்சாட்டு
இதன்போது குறித்த மக்கள், "இந்த மக்கள் அரசாங்கத்தினால் அரை ஏக்கர் காணி கொடுத்தார்கள். அதற்குள் வீடும் தென்னப்பிள்ளையும் வைக்க காணி முடிந்துள்ளது.

இந்த நிலையில் எங்களின் வாழ்வாதரத்திற்காக எங்கள் காணியுடன் அல்லது அருகில் உள்ள மந்துக்காடாக கிடந்த காணிகளை சீர்செய்து துப்புரவு செய்து எங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்காக சீர்செய்து பயிர்க்கொடிகளை நாட்டி வைத்துள்ளோம்.
வான்பயிர் செய்துள்ளோம். மரமுந்திரிகை செய்துள்ளோம். இந்த நிலையில் இந்த காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரதேச செயலகத்தினால் அ. படிவம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் சிலர் 15 ஏக்கர் வரையில் காணியினை பிடித்து ஆவணம் போட்டுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழைமக்களை கருத்தில் எடுக்கவில்லை. இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கதைத்துள்ளோம். காணி ஆணையாளரிடம் கதைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம்.
ஜனாதிபதி செயலத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதுவரையும் எந்த பதிலும் இல்லை இந்த நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.







அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam