மட்டக்களப்பில் உடைக்கப்படும் குளம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம்(21.04.2025) செங்கலடி பிரதேச செயலகம் முன்னர் இடம்பெற்றுள்ளது.
செங்கலடி சந்தி பிரதான வீதி - சந்தியில் ஒன்றினைந்த இலுப்படிச்சேனை கிராம மக்கள் பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை சென்று செங்கலடி பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், செயலக வளாகத்துள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
இதன்போது, 'குளத்தை உடைப்பதை நிறுத்து', 'அரச அதிகாரிகளே எமது பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்', 'அரசே எமக்கு உதவு' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் ஆகியோர் வருகை தந்திருந்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் என்.திலகநாதன் உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளரர் கே. தனபாலசுந்தரம், ஆர்ப்பாட்டக்கார்களிடம் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் தமது மனுவையும் கையளித்து கலைந்து சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
