பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் உசைன் - ஜெயந்தனால் சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்
பிள்ளையானின் கைது பல சந்தேகங்களையும் விவாதங்களையும் எழுப்பியுள்ள நிலையில், இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பிள்ளையானோடு முடித்து தமிழ் சமூகத்தை அந்நியப்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி, கத்தோலிக்க திருச்சபை என அனைவரும் தீவிரமாக இருப்பதாக தெரிகின்றது.
இந்த நிலையில் பல ஐயங்கள் தற்போதைய சூழ்நிலையில் எழுந்துள்ளன. ஏன் இந்த விடயம் தொடர்பில் முறையானவர்கள் விசாரிக்கப்படவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த பிறகு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு ஆயுதங்கள் பரிமாறப்பட்டதாக பேசப்படுகின்றது.
T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிலிருந்து வழங்கியதாகவும், அதற்கு எந்த பதிவுகளும் இல்லையென்றும் கூறப்படுகின்றது.
மேலும், பிள்ளையானுடன் தொடர்பிலிருந்து குற்றப்புலனாய்வுத்துறையில் சரணடைந்த உசைன், பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் ஆகியோருடனான விசாரணையின் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
உசைன் - ஜெயந்தனின் சாட்சியங்கள் முக்கியமாக மாறப்பபோகின்றது. கைதுகள் தொடர போகின்றது...
இந்த விடயங்களை தாங்கி வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
