ஒற்றை கடிதத்தால் ட்ரம்பின் தீர்மானத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ரணில் வெளியிட்ட தகவல்!
அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட சுங்க வரி, இலங்கை அரசாங்கம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தொண்ணூறு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்களே கூறியுள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "சீனாவிற்கு பிறகு சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கம் நம்மிடம் உள்ளது.
வரி தொடர்பான நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு நாங்கள் ஒரு கடிதம் அனுப்பினோம், அதன் அடிப்படையில் அவர் வரிகளை தொண்ணூறு நாட்களுக்கு ஒத்திவைப்பதாகக் கூறினார்.
உலகில் வேறு எங்கும் அப்படி ஒரு அரசாங்கம் உள்ளதா? யாருக்கும் இப்படி நடந்ததில்லை.
எனவே, இதுபோன்ற பேச்சுக்களை நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு, ட்ரம்ப்பின் பிரச்சினைக்கு முன்பே, 3.9வீதம் குறையும் என்று கூறப்பட்டது.
2026 இல் 3.4வீதமாக மேலும் குறையும். கடனை செலுத்த வேண்டிய வேகம் இல்லை. நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இது குறித்து விளக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
