சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வு
உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மசகு எண்ணெய்யின் விலை
அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (19.1.2024) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.6 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. மேலும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.10 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
