டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்
இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இவ்வகையில் ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர் ஒருவர் பத்து கோடி வரை பேரம் பேசியுள்ளாதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
முக்கிய அரசியல்வாதிகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை இப்போதிருந்தே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு ஆதரவைத் தரும் பட்சத்தில் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை வழங்குவதாகவும் வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.
கடுமையாக நிராகரிப்பு
இதேவேளை, அண்மைய நாட்களில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதிலும் ஒரு வேட்பாளர் தனக்கு ஆதரவளிப்பதற்காக டயனா கமகேவிடம் 10 கோடி ரூபாய் வரை அன்பளிப்பாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் வாக்களித்துள்ளார்.
எனினும் குறித்த வேட்பாளரின் கோரிக்கையை டயனா கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |