இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்
இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய விசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவி்த்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த டிஜிட்டல் விசா வழங்கப்பட உள்ளது.
நிரந்தர வீசா
முதலீட்டாளர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரையில் இலங்கையில் தங்கியிருப்பதற்காக விசா வழங்கப்பட உள்ளது.
மேலும் இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர விசா வழங்கப்பட உள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் விசா பெற்றுக்கொள்வதினை இலகுவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசா நடைமுறை
சுற்றுலா விசா நடைமுறைகளை இலகுபடுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் விசா பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் நோக்கில் வவுனியாவில் பெப்ரவரி மாதம் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
