பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு, எனவே நாம் அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கம்
மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது கட்சியின் அரசியல் எழுச்சிகளை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே. எனவே இச்சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம்.
எனவே பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குவதே எமது அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு அழைக்கப்படும் ஊடகவியலாளர்கள்
இதன்போது அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள், இன்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ்நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது. இன்றும் (17) முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது என வினவியுள்ளனர்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri