உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு! ஒப்புக்கொண்ட ரஷ்யா
அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பாதுகாப்பு உத்தரவாதம், நேட்டோ உதவியைப் போன்றது.
அதாவது உக்ரைன் தாக்கப்பட்டால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவும்.
உலகத் தலைவர்களின் சந்திப்பு
உக்ரைனில் நிலம், வான்வழி மற்றும் கடலில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நேட்டோ தலைவர்கள் உட்பட பல உலகத் தலைவர்கள் வொஷிங்டனில் ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம்பை நாளை(18) சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை, உக்ரைனில் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஈடாக டொனெட்ஸ்க் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என ரஷ்யா தெரிவித்திருந்தது.
எனினும், உக்ரைனின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
