இலங்கை அணி அபார வெற்றி :சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி
உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் பி குழு போட்டியொன்றில் பலம்பொருந்திய அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றியீட்டியுள்ளது.
இந்த அபார வெற்றியின் ஊடாக இலங்கை அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்தப் போட்டி கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது.
இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ட்ரெவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிட்சல் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் சார்பில் துசான் ஹேமந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதில் பெத்தும் நிஷ்ஷங்க ஆட்டமிழக்காது 52 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கு, சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவது சவாலாக மாறியுள்ளது.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam