சுற்றுலாத்துறையில் இலங்கை எட்டவுள்ள இலக்கு
இலங்கை மூலோபாய ரீதியாக ஊக்குவிக்கப்பட்டு உலகளாவிய பயணத் தளமாக மாற்றப்பட்டால், இந்த ஆண்டுக்குள், இலங்கை 2.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்
அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், 2025 ஆம் ஆண்டில் இலங்கை மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 2025 ஜூலை மாத இறுதிக்குள், 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே வந்துள்ளனர்.
அதாவது, நமது இலக்கை அடைய இன்னும் 1.7 மில்லியன் மட்டுமே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முறையான விளம்பரம் மற்றும் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கை குறைந்தது ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



