இலங்கை தமிழ் குடும்பத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை உடனடியாக விடுவிக்குமாறு கூறி அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது.
அந்த குடும்பத்தின் இரண்டாவது மகள் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த சிறுமியின் பெற்றோரான நடேசன் - பிரியா தம்பதி படகு ஒன்றின் மூலம் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றனர். எப்படியிருப்பினும் 2018ஆம் ஆண்டு அவர்களின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையினால் அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவு ஒன்றிற்கமைய அந்த நாடு கடத்தல் நடவடிக்கை தடுக்கப்பட்டது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அவர்களின் மகள் சுகயீனமடைந்தார். இந்த நிலையில் கிறிஸ்மஸ் தீவில் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போதுமானதாக இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு தங்கள் நாட்டில் இடமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரால் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த கும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியேற்ற முடியுமா என தற்போது வரையில் ஆராயப்பட்டு வருகின்றது. விரைவில் சாதகமான பதில் ஒன்று கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது.