ஜனாதிபதி மன்னிப்பு விடயம்: சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் ஒரு கைதி ஒழுங்கற்ற முறையில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், இது நிறுவன ரீதியான முறைகேடு மற்றும் சிறைச்சாலை அமைப்பின் உள் கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட முறிவு குறித்த சந்தேகங்களை எழுப்புவதாகவும் சங்கம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
எனவே, சம்பவம் குறித்து முழுமையான, பாரபட்சமற்ற விசாரணையை ஆரம்பிக்கவும் சிறைச்சாலை திணைக்களத்துக்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தின் ஆட்சி மேலோங்க வேண்டும் என்றும், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
