ஜனாதிபதி ஊடகப்பிரிவு தோல்வியடைந்து விட்டது: எஸ்.எம் மரிக்கார்
தொழில் வல்லுநர்களின் வேலைநிறுத்தம் தோல்வியடைந்ததாகச் சித்திரிக்க முயன்று, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தோல்வியடை விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (16.03.2023) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வேலைநிறுத்தத்தின் போது பொது போக்குவரத்து மற்றும் வங்கித் துறையின் நிலை குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டாலும், மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பார்க்கத் தவறிவிட்டது.
ஊடகப்பிரிவு
அதேநேரம், டொலரின் மதிப்பு குறையும் போது செய்தி வெளியிட்ட அந்த ஊடகப்பிரிவு, டொலரின் மதிப்பு உயர்ந்தபோது அதைச் செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், நாட்டில் நிலவும் பிரச்சினை பிரச்சாரப் போர் அல்ல என்றும்
மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்
எனவும் மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
