பெருந்தொகை நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்!

Gotabaya Rajapaksa Presidential Secretariat of Sri Lanka Sri Lankan political crisis Economy of Sri Lanka
By Sivaa Mayuri Oct 02, 2022 06:07 AM GMT
Report

 தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக(PCoI), 504 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இதில் 2020 ஆம் ஆண்டில் மிகப் பெரிய தொகையான 120 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சிறப்பு ஆணைக்குழுக்கள்

பெருந்தொகை நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்! | Presidential Commissions Swallowed Large Amounts

பொதுவாக இந்த குழுக்களின் கண்டறிவுகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பயனுள்ள முடிவுகளை தந்ததா என்பதை அளவிட முடியவில்லை.

2015, மார்ச் 3 (03.03.2015) மற்றும் இந்த ஆண்டு ஜூன் 30ஆம் (30.06.2022) திகதிக்கு இடையில், சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கான பணம் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் ஐந்து சிறப்பு ஆணைக்குழுக்களை நியமித்தார். இதற்காக அவரது பதவிக்காலத்தில் 337 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இவை அரசியல் பாதிப்புகளை விசாரணை செய்தல், எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தல், முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை மதிப்பிடுவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரணை செய்தல் மற்றும் இலங்கை சுங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களாகும்.

நல்லாட்சி அரசாங்கம்

பெருந்தொகை நிதிகளை விழுங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுக்கள்! | Presidential Commissions Swallowed Large Amounts

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நல்லாட்சி அரசாங்கத்தின் முதல் மூன்று வருடங்களில், ஐந்து ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றுக்கு 254 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரிய மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகள் (PRECIFAC) தொடர்பான விசாரணைகள், திறைசேரி பத்திரங்களை வழங்குதல் தொடர்பான விசாரணை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை, அவரது சொந்த அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை, மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை என்பவற்றுக்காக இந்த ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US