உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிளிநொச்சிக்கு விஜயம்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஆணைக்குழு காணாமல் போனோரின் குடும்பங்களைச் சந்தித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இன்றைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய
மாவட்டங்களிலிருந்து காணாமல் போனவர்களின் உறவுகள் குறித்த
ஆணைக்குழுவினரைச் சந்தித்துக் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு
செய்தனர்.








இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
