நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று(25.09.2022) இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது.
கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி கால வேலைத்திட்டம்
மேலும் தெரிவிக்கையில்,“பேருந்து துறையினர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன் பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு
எரிபொருள் பிரச்சினை மாத்திரமின்றி உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு பிரச்சினை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளே அதிகளவில் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு தாமதமடைவதால், இந்திய உற்பத்தி நிறுவனங்கள் குறித்த உதிரிப்பாகங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்படுத்துகின்றன.”என கூறியுள்ளார்.